திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் அமைந்திருக்கும் பனியன் மார்க்கெட்டில் . நேற்று(ஜூன் 23) இரவு எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அடுத்தடுத்து உள்ள 50க்கும் மேற்பட்ட கடைக்குப் பரவி பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடைகள் சேதம் அடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Advertisement -