வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு காரணமாகக் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் ஜூன் 27ம் தேதி வரையுள்ள அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதைப்போல், சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -