கடந்த சில வாரங்களுக்கு முன் அரிசி கொம்பன் யானை தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து , இந்த அரசி கொம்பன் யானையைக் கண்காணித்துச் சரியான நேரம் பார்த்து மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதியில் விடப்பட்டு வனத்துறையின் தொடர் கண்காணிப்பிலிருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது கோதையாறு மலைப்பகுதியில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறை ” உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையானது தான். அரிசி, கம்பு போன்றவற்றைச் சாப்பிட்டு வந்த இந்த யானை, தற்போது இயற்கை உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளதால் உடலில் இந்த மாற்றம்” என விளக்கமளிக்கப்பட்டது.
- Advertisement -