எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் பல வெளிநாட்டுப் பணியாளர்களின் பிரத்யேக திறமை தேவைப்படும் போது ஒரு சில பதவிகளில் பணியில் அமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் இந்த எச்-1பி விசா. இந்நிலையில், அப்படி அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டினர் எச்-1பி விசாவை புதுப்பிக்க தங்கள் நாட்டுக்குச் சென்று அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தான் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என இதுவரை வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இனிமேல் அமெரிக்காவில் உள்ள தூதரக அலுவலகத்திலேயே எச்-1பி விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். அதனால், வெளிநாட்டினர் அவர்களது சொந்த நாட்டுக்குச் செல்ல தேவையில்லை என அமெரிக்க அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
- Advertisement -