பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இன்று (ஜூன் 23) காலையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, மு. க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்ட பல மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்
மேலும், அவர் ” அடுத்த எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். அதைப்போல், ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களிடம், ”அடுத்த கூட்டத்தில் இன்னும் ஆழமாக விவாதிப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் செயல்பாடு இங்கிருந்து தொடங்கியுள்ளது ” என்றார்
- Advertisement -