பொதுவாகப் பலருக்குத் தூக்கத்தில் பல வினோத பழக்கங்கள் இருக்கும், அந்த வகையில், சிலருக்குத் தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணை வைத்துத் தூங்கினால் தான் தூக்கம் வரும். அப்படித் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள், முழங்கால்களிலிருந்து கணுக்கால் வரை தலையணை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால், இது கால்களை ஒரே நிலையில் வைப்பதால், காலை எழும்போது வலி இருக்காது. தவிர நல்ல தூக்கத்திற்கு உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகெலும்பைச் சீராக வைக்கவும் உதவுகிறது.
- Advertisement -