பொதுவாக பேரீச்சம்பழத்தில் அதிக இரும்பு சத்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அப்படி நாம் தினசரி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு பேரீச்சம்பழம் ஒரு சிறந்த உணவாகும் என்கின்றனர்.
மேலும், இந்த பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும் . மேலும், இதிலுள்ள மக்னீசியம் மற்றும் தாமிரங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
- Advertisement -