Tuesday, June 25, 2024 8:10 am

ஏன் எங்களை புடிச்சு தொங்கிட்டு இருக்க? : அண்ணாமலை மீது சி.வி.சண்முகம் கடும் கொந்தளிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது ஊழல் தொடர்பாக கடும் விமர்சனம் வைத்தார். இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
அந்த வகையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அதில் அவர், “அதான் உனக்கு அதிமுக புடிக்கலயே போக வேண்டியது தானே? யாரு இழுத்து புடிச்சா? ஏன் எங்களை புடிச்சு தொங்கிட்டு இருக்க? பாஜக வேறு.. அண்ணாமலை வேறு.. இவர் தனி அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்படுகிறார்” என்றார்.
மேலும், அவர் “அண்ணாமலை கவுன்சிலராக கூட பதவி வகித்ததில்லை. சொந்த கட்சியினரே அவர் மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றால், அது பாஜகவின் தலைவர்தான். இதெல்லாம், அண்ணாமலைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதெல்லாம், அவர் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மாமூல் வாங்கிட்டு இருந்திருப்பாரு” எனச் சரமாரியாகக் கொந்தளித்துப் பேசியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்