நேற்று (ஜூன் 11) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று, முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணி உலகின் நம்பர் 1 பௌலர் அஸ்வினை ஏன் எடுக்கவில்லை எனப் பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவர்கள், ” கடந்த 1983 உலகக்கோப்பை வெற்றி குறித்துப் பேசும் போது அனைவருக்கும் காட்டப்படுவது, கோப்பையுடன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் மட்டும்தான். அதே கோப்பையுடன் வேறு வீரர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?” எனக் குறிப்பிட்டு மறைமுகமாகச் சாடியுள்ளார்
- Advertisement -