தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த ஜெயலலிதாவின் ஊழல் தொடர்பாக விமர்சித்தார். அதற்குப் பதிலடி தரும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனைக் கடிக்கும் கதையாக இருக்கிறது அண்ணாமலையின் செயல். தமிழக ஊழல் தொடர்பாகப் பேசும் அண்ணாமலை, கர்நாடகாவின் பாஜக அரசு 40% கமிஷன் வாங்கியது தொடர்பாகப் பேச வேண்டியது தானே?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்
மேலும், அவர் ”ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டன் வாசலில் மோடி, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பலர் வரிசையாகக் காத்திருந்தனர். கடந்த 2014ல் தமிழ்நாட்டில் பாஜகவை ஓட ஓட விரட்டியவர்கள் நாங்கள். அதைப்போல், வரும் 2024லும் அதே நிலையை ஏற்படுத்தத் தயங்க மாட்டோம்” என ஜெயலலிதா குறித்த அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
- Advertisement -