தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் அவர், “இந்த அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து கொண்டு அந்த கட்சியின் மிகப்பெரிய தலைவரை விமர்சிப்பதை, எப்படி ஏற்க இயலும். எங்களுடைய காலை மிதித்தால் மிதிப்போம். நாங்கள் சூடு சொரணை இல்லாமல் இல்லை” எனக் காட்டமாகப் பேசினார்.
மேலும், அவர் ” அதிமுக – பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை அண்ணாமலையின் ரோல் ஒன்னுமே கிடையாது” எனக் காரசாரமாக அண்ணாமலை குறித்துப் பேட்டியளித்தார்.
- Advertisement -