தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அங்குள்ள மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அலையை மூட உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மீண்டும் இந்த ஆலை இயங்கலாம் என உத்தரவிட்டதை அடுத்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் எதிர்பாராவிதமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டால் பலர் தங்களது உயிரிழந்தனர். இதனால், தமிழக அரசு அந்த ஆலைக்குச் சீல் வைத்து முடியது.
இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது . அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா குழுமத்தின் முயற்சிக்கு ஆலை எதிர்ப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது வேதாந்தா குழும நிறுவனம்.
- Advertisement -