கடந்த ஜூன் 2 ஆம் தேதியில் ஒடிசாவில் அருகே உள்ள பஹானகா பகுதியில் கோரமண்டல் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் சுமார் 288 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர், இதில் 1000 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இந்த ஒடிசாவின் பஹானகா பகுதியில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளாகி 288 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நடந்து தற்போது 10 நாட்கள் ஆனதை ஒட்டி, அந்த பஹானகா பகுதியில் உள்ள மக்கள் மொட்டை அடித்து சடங்குகள் செய்தனர். மேலும், இவ்விபத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யவும் காயம் அடைந்தவர்கள் குணமடையவும் அனைத்து மத பிரார்த்தனையும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -