Monday, April 15, 2024 12:50 am

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஜப்பான் நாட்டின் ககாமிகஹாரா நகரில் நடந்து வந்த மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் , தென்கொரியா அணியும் தகுதி பெற்றது. இந்நிலையில், நேற்று (ஜூன் 11) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய மகளிர் அணியை வீழ்த்தினர்.
இதன்மூலம், இந்திய மகளிர் அணி முதல்முதலாக இந்த ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஏனென்றால், இந்திய அணி இதற்கு முன்  4 வெண்கலப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மட்டுமே வென்றிருந்தது. அதிலும் குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்த நிலையில், தற்போது முதல்முறையாக இந்திய மகளிர் அணியினர் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் இக்கோப்பையை வென்றதால் அடுத்து சிலி நாட்டில் நடைபெறும்  ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இவ்விரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்