உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணியை 209 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இந்த உலகக்கோப்பையைக் கைப்பற்றிருந்தது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் மெதுவாகப் பந்து வீசியதற்காக, போட்டிக்கான கட்டணத்திலிருந்து இந்திய அணிக்கு 100%-ம் ஆஸ்திரேலியாவுக்கு 80%-ம் அபராதமாக விதித்தது ஐசிசி.
அதேசமயம், இந்த உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதித்துள்ளது ஐசிசி. ஏற்கனவே மெதுவாகப் பந்து வீசியதற்காக, போட்டிக்கான முழு ஊதியமும் (100%) இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 115% அபராதம் கட்ட வேண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -