உலக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்குக் காரணம் கேப்டன் ரோஹித் ஷர்மா தான் என்றும், ஆனால் தோனி தலைமையில் இந்திய அணி பல உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஒரு ரசிகர் பதிவிட்டது இணையத்தில் வைரலானது. இதற்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள், “தோனி தனியாக விளையாடி உலகக்கோப்பைகளை வென்றாரா?” எனத் தனது கருத்தை அந்த ரசிகரின் ட்வீட்க்கு எதிராகப் பதிவிட்டார்.
இந்நிலையில், இப்படி கருத்தை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள நிலையில், தோனியின் கேப்டன்சியை புகழ்ந்து முந்தைய காலங்களில் ஹர்பஜன் சிங் பதிவிட்ட ட்வீட்களை பகிர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது கேப்டன்களை மட்டும் TAG செய்து வாழ்த்து தெரிவித்த ட்வீட்களும் தற்போது வைரலாக்கி தங்களது எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -