சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) டெல்டா மக்களின் நீர்ப் பாசனத்திற்காக மேட்டூர் அணையின் தண்ணீரைத் திறக்கப்பட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர், ” இந்தியாவில் இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் பாஜக தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். நேற்றைய வேலூர் கூட்டத்தில் அமித்ஷா அவற்றுக்குப் பதிலளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ”தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்படவில்லை. பாஜகதான் அறிவித்தது. அதை அவர்கள்தான் செயல்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
- Advertisement -