பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து, அதிமுகவின் EX அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், ”அண்ணாமலையின் போக்கு இப்படியே தொடர்ந்தால் கூட்டணி குறித்து அதிமுக முடிவெடுக்கும். அண்ணாமலையை, பாஜக தலைமை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால், அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்ந்தால், கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.
மேலும், அவர் ” தன்னை முன்னிருத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பேசிவரும் அண்ணாமலையின் பேச்சை பாஜக தலைமை கட்டுப்படுத்த வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்பதையே அண்ணாமலையின் செயல் காட்டுகிறது . அதிமுக ஒரு ஆலமரம், பாஜக ஒரு செடி. சட்டமன்றத்தில் 4 சீட்டு யாரால் வந்தது? அதிமுகவால் வந்தது. எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம். கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை போனாரே ஜெயிச்சுட்டாரா? இவர் போன ராசி அங்க அம்போனு போயிடுச்சு. ஆகவே, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு, அதுவரை பார்ப்போம்” எனச் சரமாரியாகப் போட்டுத் தாக்கியுள்ளார்.
- Advertisement -