ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் முடிந்ததும், ஜூன் மாதத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரைத் தமிழக கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும். அந்தவகையில், இந்தாண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீசன் வருகிற ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் சேலத்திலும், குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடக்கிறது. மேலும், இந்த போட்டிகளை Fancode என்ற டிஜிட்டல் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -