Wednesday, December 6, 2023 12:26 pm

சித்தார்த் நடித்த ” டக்கர்” படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டக்கர் படத்தை இதற்கு முன்பு கப்பலை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். டக்கருக்கு பேஷன் ஸ்டுடியோவின் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆதரவு அளித்துள்ளனர். சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யன்ஷா நாயகியாக நடிக்கிறார். சித்தார்த் மற்றும் திவ்யன்ஷாவைத் தவிர, படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டக்கரின் தொழில்நுட்பக் குழுவினர் ஒளிப்பதிவாளராக வாஞ்சிநாதன் முருகேசன் மற்றும் எடிட்டராக ஜி.ஏ.கௌதம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். உதய குமார் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாளுகிறார்.

கதையின் கரு

பணக்காரனாக ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்) . ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்து அங்கு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. எல்லா வேலைகளையும் விட்டு கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் காட்டப்படுகிறது. சந்தர்ப்ப சூழலால் இந்த ஏரியாவுக்கு வரும் சித்தார்த் அங்கிருந்த கார் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அந்த காரில் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.

படம் எப்படி?

ஹீரோ, ஹீரோயின் , வில்லன் குரூப் என ஒவ்வொருவராக அறிமுகப்பத்தப்படுவதற்குள் படத்தின் முதல்பாதி முடிந்து விடுகிறது.
இரண்டாம் பாதியிலாவது கொஞ்சம் விறுவிறுப்பான ஒரு ரோட் மூவி பார்க்கலாம் என்று எதிர்பார்த்தால் மிக நிதானமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக். வில்லன்களின் கூட்டத்தில் இருக்கும் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றுல் சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது .மற்றபடி இத்தனைக் கால காத்திருப்புக்கு பின் வெளியாகும் சித்தார்த்தின் டக்கர் படத்தில் புதிதாக எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஏழை – பணக்காரன் வேற்றுமை எல்லா காலத்திலும் ஏற்புடையதாக இருக்கும் ஒரு கதைக்களம். வர்க்க முரண் தொடர்பான காட்சிகள் வெகுஜனத்தை ஒரு படத்திற்குள் ஈர்க்க செய்யும் மிக எளிய வழியாகும் . ஏற்கனவே இந்த வரிசையில் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் டக்கர் படமும் சேர்ந்துள்ளது. இதில் வெகு சிலப் படங்களே தனித்து நிற்கும் நிலையில் டக்கர் அந்த வகையா என்றால் கேள்விக்குறி தான்..!

படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் ரேஸியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் சித்தார்த் நடிக்கத் தேர்வு செய்யும் கதைகள் பழசாக இருக்கிறதா இல்லை ஒவ்வொரு படத்தையும் எடுத்து அது வெளியாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அந்த கதைகள் பழசாகிவிடுகின்றதா என்று தெரியவில்லை. ஆக மொத்தம் டக்கர் கொஞ்சம் மக்கர் தான்..!

இசை மற்றும் பிற துறைகள்?

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மொழிபெயர்ப்பில் தவறிவிட்டது. எந்தப் பாடல்களும் அவற்றின் சாதாரணத்தன்மை மற்றும் இடவசதி காரணமாக திரையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்னணி ஸ்கோர் வித்தியாசமாக இல்லை மற்றும் குறைவாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சித்தார்த் திரைப்படங்கள் ஒரு மென்மைத்தன்மையைக் கொண்டுள்ளன, ஆனால் அது இங்கே இல்லை. தேதியிட்ட அதிர்வு உள்ளது, அது பார்வைக்கு உணரப்படுகிறது. வி முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஏ.கௌதமின் எடிட்டிங்கும் உதவவில்லை. பெரும்பாலும் வழக்கமான மற்றும் யூகிக்கக்கூடிய வரிகளுடன் எழுதுவது அரிதாகவே கடந்து செல்லக்கூடியதாக உள்ளது.

சிறப்பம்சங்கள்?

படத்தின் முதல் பாதி மற்றும் சுவாரசியமான ஆரம்பம்

குறைகள்?

இரண்டாம் பாதி அரைகுறை பாத்திரங்கள் உயிரற்ற காதல் ட்ராக் நம்ப முடியாத வில்லன் டிராக் பாடல்கள் மற்றும் காலாவதியான நகைச்சுவை

- Advertisement -

சமீபத்திய கதைகள்