கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் பயங்கர விபத்தானது. இதில் நூற்றுக்கணக்கான பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்காலிகமாக பாஹாநாகா அரசு உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, இந்த பாஹாநாகா அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்கு மாணவ, மாணவிகள் பயப்படுவதாகப் பெற்றோர் புகாரளித்துள்ளனர். தற்போது பெற்றோர் புகாரைத் தொடர்ந்து, இப்பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாகக் கட்டும் பணிகளைப் பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிவதற்குள், இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -