பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ” அத்வானியின் சகாப்தத்தை எனது தந்தை லாலு பிரசாத் தடுத்து நிறுத்தியது போல், வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முடிவு கட்டுவார்” எனப் பேசினார்.
மேலும், அவர் ” பீகாரில் உள்ள மகா கூட்டணிக் கட்சி மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் பாஜக தலைவர்களோ கோயில், மசூதி, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளால் சமூகத்தை விசமத்தனமாக மாற்றுகின்றனர்” என மோடி அரசைச் சரமாரியாகச் சாடியுள்ளார்.
- Advertisement -