உங்கள் தலை முன்னோக்கி நகர்த்திருப்பது, சிலருக்குப் பின் கழுத்தில் மேடான பகுதி உருவாகியிருப்பது (வலியில்லாத வீக்கமான பகுதி). தோள் பட்டை வழக்கத்தை விட முன்னோக்கி நகர்ந்திருப்பது. சில நேரங்களில் கழுத்து இயக்கத்தில் ஏற்படும் வலி, தோள் பட்டை, கை, விரல்களில் ஏற்படும் மதமதப்பு, தலைவலி, தலைச் சுற்றல் இதெல்லாம் கழுத்து வலியின் அறிகுறிகளாகும்.
இந்த கழுத்து வலியைத் தவிர்க்க, இந்த கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்துக் கொண்டு கண்ணிற்கு நேர் எதிராக வைத்துப் பயன்படுத்த வேண்டும். கழுத்து தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க, தளர்வடைய செய்யும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த பலவீனமான தசைகளைப் பலப்படுத்தப் பயிற்சி செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது சரியான உடல் மற்றும் முதுகெலும்பு அமர்வை மேற்கொள்வது அவசியம்.
- Advertisement -