தமிழகத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 14 ஆம் தேதியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல மக்கள் கோடை விடுமுறை ஒட்டி வெளியூர் பயணம் மேற்கொண்டு இருப்பவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் அவரவர் ஊருக்குச் செல்ல அதிகமாகப் பேருந்தில் பயணம் மேற்கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் இந்த 2023ம் ஆண்டுக்கான கோடை விடுமுறைக்குப் பின் வரும் 12ம் தேதி பள்ளி திறப்பை முன்னிட்டும் வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டும், கூடுதலாக 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளப் போக்குவரத்துக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- Advertisement -