Wednesday, May 29, 2024 5:08 pm

ஜூலையில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 ராக்கெட் : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவிலிருந்து நிலவுக்குச் சென்று ஆய்வு நடத்த அனுப்பப்படும் விண்கலம் தான் சந்திரயான் ஆகும். அப்படி இந்த சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டு தற்போது இந்த நிலவு குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ சேகரித்து வருகிறது. இந்நிலையில், நிலவின் தென்துருவம் யாரும் இதுவரை ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், இந்த நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன.
அதற்காக, இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை நிலவில் உள்ள தென்துருவத்திற்கு அனுப்ப முடிவெடுத்தது. இந்நிலையில், நிலவில் ஆய்வு செய்ய இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள ‘சந்திரயான் 3′ விண்கலம், வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் சற்றுமுன் தகவல் அளித்துள்ளார்.
மேலும், இந்த சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 42 நாளில், ‘சந்திரயான் 3’ லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆய்வு தொடங்கும் எனத் தகவல் அளித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்