- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் சமீபத்திய நேர்காணலில் தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். அதில் “தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் அதிக தென்னிந்திய மொழி படங்கள் பார்க்கிறார்கள்” என கூறினார்.
மேலும், அவர் ” இங்குள்ள ரசிகர்கள் எப்படி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களை ரசிக்கிறார்களோ அதேபோல் தென்னிந்தியர்களும் ரசிக்க வேண்டும்.நாங்களும் நல்ல இந்தி படங்களை எடுத்துள்ளோம்” என வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
- Advertisement -