உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தனது கைகளில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர். இது குறித்துக் கேட்ட போது, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய – ஆஸ்திரேலியா அணி வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -