கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இதில் பல உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருக்கிறது என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது
இந்நிலையில், கட்டாக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த ஒடிசா ரயில் விபத்து நிவாரணத்தைப் பெறுவதற்காக, அடையாளம் காண முடியாத சடலத்தை, தன்னுடைய கணவர் எனக்கூறி நாடகமாடி உள்ளார். இதையறிந்த அவரது கணவர் பிஜெய் டட்டா அவர்கள் காவல்நிலையத்தில், ”தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் தன்னை இறந்துவிட்டதாக, மனைவி கீதாஞ்சலி பொய் கூறி வருவதாகவும், ஆனால் நாங்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வாழ்வதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -