கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அண்மையில் வேண்டுகோள் வைத்து இருந்தது.
இதையடுத்து, இந்த வேண்டுகோளை ஏற்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றார் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி. இதனால், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் முதல் 2 ஆஷஸ் போட்டிகளுக்கான அணியில் இவரைச் சேர்த்துள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -