Friday, March 29, 2024 6:03 pm

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று (ஜூன் 7) பிற்பகல் 3 மணிக்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் எந்த அணி வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி, ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். ஏனென்றால், இதுவரை சாம்பியன் டிராபி, ஒருநாள் மற்றும் டி20 ஆகிய உலகக் கோப்பைகளை இரு அணிகளும் சமமாக வென்றுள்ள நிலையில், இந்த டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லுவதின் மூலம் ஐசிசி-யின் அனைத்து உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை நிகழ்த்தும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்