Thursday, April 25, 2024 7:19 pm

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயில் : தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் கோடைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், மே 3ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. ஆனால், அப்போது ஏற்பட்ட  புயலால், தமிழகத்தில் அதிகபட்சம் 2 வாரங்களாகக் கனமழை பெய்து வெப்பத்தைத் தணித்து வந்தது. பின்னர், இப்புயல் மியான்மர் நோக்கிச் சென்ற பின் தமிழகத்தில் பல மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் குறைந்து வெப்ப நிலை அதிகரித்தது.
இந்நிலையில், இந்த அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்தவகையில், நேற்று (ஜூன் 5) சென்னை நுங்கம்பாக்கத்தில்  2வது முறையாக 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில் கொளுத்தி வந்தது. அதேசமயம், இது கடந்த 200 ஆண்டுகளில் 7வது முறையாக இந்த 108 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்