பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ ஏற்படக்கூடும். எனவே காபி குடிப்பதைத் தவிருங்கள்.
மேலும் பெண்கள் சாதாரண நாட்களை விட, இந்த கர்ப்ப காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மற்ற எல்லோரையும் விட, அவர்களுக்கு அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதிலும், இந்த இறைச்சி மற்றும் மீன், பதப்படுத்தப்படாத சாறு அல்லது பால் அல்லது அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், பேஸ்டுரைஸ் செய்யப்படாத மென்மையான பாலாடைக்கட்டிகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
- Advertisement -