இந்தி இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக நடிகர் பிரபாஸ், ராவணனாகப் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், சீதையாக நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த பிரம்மாண்ட படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி தொழிநுட்பத்தில் வருகின்ற ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதிபுருஷ் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, கோயில் முன்பு திரைப்பட நடிகை க்ரித்தி சனானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அப்படத்தின் இயக்குநரால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், திருப்பதி கோயிலில் வைத்து ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக நடித்த க்ரிதி சனோனை படத்தின் இயக்குநர் ஓம் ராவுத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக அவர்கள் “கோயிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தைக் காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறி தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
- Advertisement -