பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம், மூன்றாம் இடம் தலைமுடி வகிட்டின் ஆரம்பம், தலையின் மத்தியில் பெண்கள் கோணலாக இல்லாமல் மூக்கு நுனிக்கு நோகத் தான் வகிடு எடுக்க வேண்டும்.
இந்த 3 இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீலட்சுமி தேவியை வணங்குவதை ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தினமும் அவசியம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் மாங்கல்ய பலன் அதிகரித்து கணவனின் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.
- Advertisement -