Saturday, April 20, 2024 12:26 am

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில் நடைபெற்ற பல்கலை துணை வேந்தர் கலந்துரையாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கடும் விமர்சனம் வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விமர்சனம் குறித்துப் பேட்டியளித்து வருகிறார்.
அதில், ” அத்துமீறிப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி. கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ரவி மறைத்துவிட்டுப் பேசியுள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதைத் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்” என்றார்.
மேலும், அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க பல நாடுகளுக்குப் பயணம் செய்தார், வெளிநாடுகளுக்குச் சென்றால் முதலீடுகளை ஈர்க்க முடியுமா என்ற கேள்வியை ஆளுநர் ரவி, பிரதமரை நோக்கி எழுப்புவாரா? ஆளுநர் ரவி இப்போது பாஜகவைத்தான் சுட்டிக்காட்டுகிறாரா என்ற சந்தேகம் வருகிறது” என அடுக்கடுக்காக கேள்வியெழுப்பினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்