மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் வரும் பக்தர்கள் இங்கு உள்ள சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இன்று (ஜூன் 6) இதுகுறித்த விசாரணையில் இப்படிக் கோயில் உள்ள சிலைகளைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிடுவதால் பல சிலைகள் திருட பெரும் காரணமாக அமைகிறது எனக் கூறி கோயில் நிர்வாகம் வாதிட்டது.
பின்னர் இந்த விசாரணை முடிவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்குத் தடை விதிக்கவோ முடியாது என அதிரடி தீர்ப்பளித்தது. ஏனென்றால், அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருடப் புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்துப் பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில், நாம் 2000 வருடப் புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் நீதிபதிகள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.
அதனால், கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- Advertisement -