Tuesday, September 26, 2023 3:54 pm

பாலத்தை தகர்த்தது பாஜகதான் : பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாகக் கங்கை நதியின் நடுப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பாலத்தின் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் , கடந்த ஜூன் 4ஆம் தேதி மாலை 6 மணியளவில் இப்பாலம் திடீரென இடிந்து நதியில் விழுந்தது.
மேலும், இப்பாலம் கட்டுவதற்கு சுமார் ரூ1,710 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்பாலம் கடந்த 2021ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதும் இதேமாதிரி இடிந்து விழுந்தது. இப்படி பாலம் விழுவது தொடர்ந்து 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் அவர்கள், ” கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலத்தைத் தகர்த்தது பாஜகதான்; நாங்கள் பாலத்தைக் கட்டுகிறோம்; அதை அவர்கள் தகர்க்கின்றனர்” எனக் குற்றச்சாட்டி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்