Sunday, April 21, 2024 9:17 pm

முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக – கேரளா பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, கடந்த மாதம் 27-ம் தேதியில் தமிழக வனப்பகுதியில் புகுந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்தது. இதையடுத்து கம்பம் நகரில் உள்ள தெருக்களிலும், சாலைகளிலும் ஓடி அட்டகாசம் செய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
அவ்வாறு யானை ஓடும்போது அந்த வழியாகச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், பயத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர், இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அந்த அரிக்கொம்பன் யானையைப் பிடித்து மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், வனத்துறையினர் 3 கும்கி யானைகளின் உதவியுடன் சேர்த்து இந்த மயக்கத்திலிருந்த அரிக்கொம்பன் யானையை, வனத்துறைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்தியேக லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள, மேல கோதையாறு பகுதியில் அரிக்கொம்பன் யானை வனத்துறையினால் விடப்பட்டது எனத் தகவல் வந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்