Saturday, April 20, 2024 3:03 pm

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார், சமையல், பைக் பந்தயம், கார் பந்தயம், விமானம் கட்டுதல் போன்றவற்றில் தனது ஆர்வத்தைத் தொடர்கிறார். தற்போது தனது “ரைடு வித் மியூச்சுவல் ரெஸ்பெக்ட்” உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பாதியை பைக்கில் முடித்துவிட்டு நவம்பரில் மீண்டும் தொடங்கவுள்ளார். அனைத்து ஏழு கண்டங்களும்.

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் விளையாட்டுத்திறனை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக்ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித் அவ்வப்போது தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்துள்ளார்.

அதேபோல் சமீபத்தில் இந்தியாவின் அண்டை நாடாள நேபாளத்தில் இருந்து உலக டூர் சுற்றுலாவை தொடங்கிய அஜித் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது சென்னை திரும்பியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது பயணத்தை மீண்டும் தொடர உள்ளார். அஜித் உலக டூர் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பயணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

நடிப்பு பைக் ரேஸ் என சுற்றி வரும் அஜித்துக்கு மாறாக அவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார். ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி அணியின் யூத் டீமிற்காக களமிறங்கிய விளையாட உள்ள ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்விக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஆத்விக் சென்னையின் எஃப் சி அணியின் ஜெர்சி அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், ஒருசில நெட்டிசன்கள் ஆத்விக் முன்னணி கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ போன்று ஸ்டைலாக கால்பந்து விளையாடுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார் அஜித்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்