Wednesday, September 27, 2023 11:05 am

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி யானையை வைத்து வனப்பகுதியில் விட சென்றனர். இந்நிலையில், இந்த  அரிசிக்கொம்பன் யானையைக் கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கேரள அரசு வாங்க மறுத்தால் வன சட்டப்படி கொலை செய்ய வேண்டும் எனத் தேனியைச் சேர்ந்த கோபால் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்தது, அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ” பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை களக்காடு வனப்பகுதியில் விட, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. யானையால் ஏற்பட்ட சேதத்தைக் கணக்கிடக் குழு அமைக்கப்பட்டுள்ளது  என விளக்கினார். இந்நிலையில், அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
அதனால், தேனி மாவட்டத்தில் இன்று மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் காட்டு யானையை, நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில்பட்டி அருகே யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்துக் குளிர்விக்கப்பட்டதாக சற்றுமுன் தகவல் வந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்