விநாயகர், ”தம் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்குப் பிடிக்கும். அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் கூறியிருக்கிறார்.
இப்படி, சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ்த் தேசத்துக்கு மட்டுமே உரியது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரசமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறு தேங்காய் நமக்கு உணர்த்துகிறது.
- Advertisement -