Wednesday, September 27, 2023 11:29 am

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், 1000க்கு மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும். இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக ரயில்வே வழங்குகிறது.விபத்தில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவோம், மீட்புப் பணி நிறைவடையும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுவோம்” எனப் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்