பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது, வித்தியாசமான கோணங்களில் கால்களை மடக்கி, நீட்டிப் படுப்பது, மல்லாந்து படுப்பது போன்றவை தவறு. அதைப்போல், நீங்கள் இடது புறமாகத் திரும்பிப் படுப்பதைத் தவிர, மற்ற முறைகளில் படுத்து உறங்கினால், இரைப்பையிலிருந்து உணவானது உணவுக்குழாய்க்குள் புகுந்து எதுக்களித்தலை ஏற்படுத்தும்.
ஆகவே, நீங்கள் எப்போதுமே படுக்கையில் இடதுபுறம் திரும்பிப் படுப்பதுதான் சிறந்தது. அதிகபட்சம் 80 – 90 சதவிகிதத்துக்கு மேல் வயிறு நிரம்பும் அளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரைப்பையில் செரிமானம் நடப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் ஆகும். எனவே, உணவு உண்ட பின்னர் உடனடியாக அதிகப் பளு தூக்குவது, கடினமான பயிற்சிகள் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- Advertisement -