இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர். இது முற்றிலும் தவறான விஷயம் என மருத்துவர்கள் அறிவுறுத்திக்கின்றனர். அதன்படி, இனி செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், நீங்கள் செம்பு பாத்திரத்தில் நீர் பருகும் போது, அது உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது.
மேலும், நீங்கள் கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். அதைப்போல், உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்களை முற்றிலும் அழித்து விடும், இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்கின்றனர்.
- Advertisement -