நேற்று இரவில் ஒடிசா அருகே வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்தானது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் தற்போது வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் 288 பேர் இந்த விபத்தில் பலியானதாகவும், 900க்கு அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்தில் பயணிகளை மீட்கும் பணி தற்போது நிறைவு அடைந்ததாக அங்குள்ள ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவர்களை இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்க அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தனர்.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், “ ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 70 ஐசியூ படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையிலும் படுக்கைகள் போதுமானதாக உள்ளது. அங்கு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக” சற்றுமுன் தகவல் அளித்துள்ளார்.
- Advertisement -