Wednesday, September 27, 2023 11:50 am

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, நேற்று மட்டும் ரூ.35க்கு விற்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விலை ஏற்றம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தற்போது முகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இது முடிந்த பிறகு தக்காளி விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றனர். இதைப்போல் பழங்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது.
நேற்று, கேரட் ரூ.60, மிளகாய் ரூ.60, குடைமிளகாய் ரூ.70, பீட்ரூட் ரூ.45, கத்தரிக்காய் ரூ.70, முட்டைகோஸ் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்பனையானது. அதைப்போல்,  மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.200, ஆரஞ்சு ரூ.120, சாத்துக்குடி ரூ.80, பன்னீர் திராட்சை ரூ.100, மாம்பழம் ரூ.40-க்கும் விற்பனையானதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்