Wednesday, September 27, 2023 11:10 am

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati Granturismo S Coupe) எனும் சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார். பின்னர், இந்த காரை தமிழகத்தில் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், அப்போது ஹரீஷ் ஜெயராஜ் இந்த காருக்கான நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி இந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜுக்கு அபராதம் விதித்துத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த காருக்கான நுழைவு வரி பாக்கியையும், அபராதமும்  செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். ஆனால், ஏற்கனவே இந்த வரியைச் செலுத்தியதால் அபராதம் விதித்ததற்குத் தடை விதிக்க ஹரீஷ் ஜெயராஜ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது, இதுகுறித்த விசாரணையில் , இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி ஏற்கனவே செலுத்தியதால், விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை  விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்