Friday, April 19, 2024 2:13 pm

2023 ஐபிஎல் பைனலுக்கு முன் சிஎஸ்கே அணியில் தோனி எடுத்த முடிவு! நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடிப்பதைத் தடுக்க, இளம் வீரரான ஷுப்மான் கில் தனது கட்டுப்பாட்டின் கீழ் அனைத்தையும் செய்வார்.

சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக கேப்டன் தோனி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது.

இன்று நடக்கும் இறுதிபோட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. குஜராத் இடையே இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. கடைசியாக குவாலிபயர் சுற்றில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை வீழ்த்தியது.

முன்னதாக இந்த சீஸனின் முதல் போட்டியிலோ குஜராத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. தற்போது அதே குஜராத் மைதானத்தில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.இது ஹோம் மைதானம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு பிட்ச் எதிராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த பிட்ச் குஜராத் அணிக்கு சாதகமான பிட்ச். சென்னை பிட்ச் போல இது ஸ்லோவாக இருக்காது. அதனால் இன்று நடக்கும் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் கடந்த சில போட்டிகளாகவே வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரே அணியை வைத்து தோனி ஆடிக்கொண்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பத்திரானா, துஷார் தேஷ் பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆடி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டிக்கு முன்பாக அணியில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சிஎஸ்கே அணியில் மிட்சல் சான்டனர் மொயின் அலிக்கு பதிலாக ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.

இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். ஆனால் இவர் 15 வெறும் போட்டிகளில் மட்டும் ஆடும் லெவனில் ஆடி உள்ளார்.சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்பயாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.

அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.

சான்ஸ்: மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாக இல்லாத காரணத்தால் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சிஎஸ்கே அணியில் மிட்சல் சான்டனர் மொயின் அலிக்கு பதிலாக ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.மாற்றம் இல்லை: ஆனால் இன்று சிஎஸ்கே அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்ற முடிவை கேப்டன் தோனி எடுத்துள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில போட்டிகளாக ஒரே அணியுடன் ஆடி வருகிறோம்.

அப்படியே ஆடுவோம். அணியில் மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். இதே 11 வீரர்களே ஆடட்டும் என்று கேப்டன் தோனி முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று குஜராத் அணிக்கு எதிராக . சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பத்திரானா, துஷார் தேஷ் பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆடி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இரு அணிகளும் கடைசியாக அந்த இடத்தில் சந்தித்தபோது – ஐபிஎல் 2023 தொடக்கத்தில் – குஜராத் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த குவாலிபையர் 1ல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் பெற்ற வெற்றியின் மூலம் நம்பிக்கையை பெறும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்