Wednesday, April 17, 2024 7:40 am

வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றளவிலும் நம் விட்டில் கூற கேட்டு இருப்போம். இன்று வைகுண்ட ஏகாதசி எல்லாரும் தூங்காமல் 9 பரமபதம் விளையாடுவார்கள் என்று பெற்றோர்கள் கூறுவார்கள். ஏன் அன்றைய தினம் மட்டும் பரமபதம் விளையாட வேண்டிய அவசியம் என்ன? எதற்காக விளையாடக் கூறியிருக்கிறார்கள் என்று கேட்டால் நம்மில் பலருக்கு விடை தெரியாது, உண்மை தானே.

ஆம் அன்றைய காலத்தில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண் விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்பட்டு இருக்கிறது. அதாவது அன்றைய தினத்தில் பரமபதத்தில் விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம் என்றும் பாம்பிடம் சிக்கினால் வாய் வழியாக மறுபடியும் அடிப்பகுதிக்கே வர நேரிடும் என்பது விதி.

இங்கு ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவத்தைக் குறிக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டைப் பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடி இருக்கிறார்கள். பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு அமைந்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்