- Advertisement -
பொதுவாக மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்நிலையில், சிறுவயதில் பள்ளியில் சரியாகப் படிக்காத பையனை, இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழுந்திருக்கக் கூறுவர்.
ஏனென்றால், அப்படி உக்கி போடும்போது, உங்கள் காது நரம்புகள் செயல்பட்டு, மூளைக்கு ஆணையிட்டு, அவன் படிப்பான் என்கிறது. இதை, ‘உக்கி போடுதல்’ என்பர். சில ஆசிரியர்கள், தலையில் குட்டு வைப்பர். அப்படிக் குட்டு வைக்கும்போது, மூளைக்குத் தரப்படும் சிறு அதிர்ச்சியால், மூளை செயல்படும் என்பதும் உண்மை.
- Advertisement -